
இலங்கை வீரர்கள் தங்களது கிரிக்கெட் விழிப்புணர்வை மேம்படுத்த கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இலங்கை வீரர்கள் தங்களது கிரிக்கெட் விழிப்புணர்வை மேம்படுத்த கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கை அணிக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஈடுபாடு இருக்கிறது. ஆனால், அவர்கள் அழுத்தமான சூழலை நன்றாக கையாள வேண்டும். கிரிக்கெட் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். தோல்விக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் ஒருவரால் விலகி செல்ல முடியாது. இலங்கையில் உள்ள மைதானங்கள் பெரியவை. இங்கு சிக்ஸர் அடிப்பதைக் காட்டிலும் பவுண்டரிகள் மற்றும் 2 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோரை குவிக்க முடியும்.
இலங்கை அணியின் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் விளையாடிய காலத்திலும் ஒரு கிரிக்கெட்டராக நான் நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளேன். விமர்சனங்களை நாம் திறம்பட கையாள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.