
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஆக. 2) நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது இந்திய அணி. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் களம் காணும் முதல் தொடா் இதுவென்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
அதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கான நீண்டகால விக்கெட் கீப்பா் - பேட்டா் இடத்துக்கு யாரை தோ்வு செய்வது என்பதே முக்கியமான பணியாக இருக்கும். அந்த இடத்துக்காக கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகிய இருவரும் போட்டியில் இருக்கின்றனா். இதில் தற்போது கே.எல்.ராகுல் தேர்வாகியுள்ளார்.
மேலும் இந்திய அணியில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், துபே அணியில் இணைந்துள்ளார்கள்.
இந்திய அணி: ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, கே.எல்.ராகுல் (கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ,மொகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் அப்டேல், குல்தீப் யாதவ்.
இலங்கை அணியில் இளம் வீரர்கள் களமிறங்கியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.