
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை வென்றது.
இந்நிலையில், கொழும்புவில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ரியான் பராக் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு மாற்றாக ரிஷப் பந்த் விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழக்க நேரிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.