டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் நம்பிக்கையில் ஆடம் ஸாம்பா!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற முடியும் என நம்புவதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக ஆடம் ஸாம்பா அதிக அளவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடினாலும், ஆஸ்திரேலிய அணிக்காக அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடி பல ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவர் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற முடியும் என நம்புவதாக ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுள்ளது எனக்கு நம்பிக்கையளிக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நான் இடம்பெற்றால், எனது சராசரி குறித்து பேசுவார்கள். ஆனால், என்னால் நன்றாக பந்துவீச முடியும் என நம்புகிறேன் என்றார்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.