புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.


இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.
தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடத்தப்படும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கவுள்ளது. மத்திய பிரதேசம், தில்லி, ஹரியானா, ஹைதராபாத், மும்பை, ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்பட 12 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொண்டு விளையாடுகின்றன. போட்டிகள் அனைத்தும் திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் உள்பட நான்கு மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், புஜ்ஜி பாபு தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக ஒரு போட்டியில் விளையாடவுள்ளார்.
மும்பை அணியில் ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ள நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் அவருடன் இணைந்துள்ளார். இருவரும் மும்பை அணிக்காக ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 30 வரை கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளனர்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...