செர்பியாவில் விளையாட ஒப்பந்தமான முதல் இந்திய (தமிழக) வீரர்!

தமிழகத்தைச் சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீரரான உல்ஹாஸ் சத்யநாராயணன் செர்பிய லீக் போட்டிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
உல்ஹாஸ் சத்யநாராயணன்
உல்ஹாஸ் சத்யநாராயணன்படங்கள்: எக்ஸ் / உல்ஹாஸ் சத்யநாராயணன்
Published on
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீரரான உல்ஹாஸ் சத்யநாராயணன் செர்பிய லீக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

செர்பியாவில் நடைபெறும் கேஎல்எஸ் எனப்படும் கூடைப்பந்து டிவிஷன் 1 விளையாட்டு போட்டியில் 2024- 2025 வரை விளையாட தமிழகத்தைச் சேர்ந்த உல்ஹாஸ் சத்யநாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர் 7 வயதுமுதல் கூடைப்பந்து விளையாடி வருகிறார். 2019இல் ஓல்ட் ஸ்கூல் பாலர்ஸ் லீக்கில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல உதவியுள்ளார்.

உல்ஹாஸ் சத்யநாராயணன்
ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் பாபர் அசாம், அடுத்தடுத்த 3 இடங்களில் இந்திய வீரர்கள்!

இந்தியாவில் இருந்து செர்பியாவில் டிவிஷன் 1 போட்டியில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அக்டோபர் 3 முதல் இந்தப் போட்டிகள் துவங்கவிருக்கின்றன. அங்கு உல்ஹாஸ் சத்யநாராயணன் குறைந்தது 3-7 மாதங்கள் விளையாடவிருக்கிறார்.

இதற்கு முன்பாக ஐரோப்பாவியாவின் மால்டோவா, மில்டா நாட்டுக்காகவும் விளையாடியுள்ளார். ஐரோப்பாவில் இது அவரது 3ஆவது ஆண்டுக்கான ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஒலிம்பிக்கில் செர்பிய அணி அமெரிக்காவுடன் பலப்பரீட்சை செய்து வெண்கலம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

உல்ஹாஸ் சத்யநாராயணன்
பழிதீர்க்க காத்திருக்கும் ஆஸி., இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறும்: ரவி சாஸ்திரி நம்பிக்கை!

இது குறித்து ஐஏஎன்எஸ்க்கு அளித்த பேட்டியில் உல்ஹாஸ் சத்யநாராயணன் கூறியதாவது:

சர்வதேச கூடைப்பந்து போட்டியில் மிகவும் பிரபலமான கிளைவ் காஸ்டில்லோ தலைமைப் பயிற்சியாளராகவுள்ள வெஸ்ட்மினிஸ்டர் டிராகன் அணிக்கு முதன்முதலாக தேர்வாகினேன். வெஸ்ட்மினிஸ்டரில் எனது வெற்றிக்கு கிளைவ் முக்கிய பங்கு வகிக்கிறார். என்னை நானே நிரூபிக்க எனக்கு அதிகமான வாய்ப்புகளும் எல்லா நேரமும் எனக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார் என்றார்.

அமெரிக்காவின் என்பிஏ லீக்கில் விளையாட ஆர்வமுடன் உள்ளதாகவும் உல்ஹாஸ் சத்யநாராயணன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com