ரோஹித் சர்மா, விராட் கோலியை துலிப் கோப்பையில் விளையாட வலியுறுத்தக் கூடாது: ஜெய் ஷா

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் ஆந்திரம் மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஜெய் ஷா
ஜெய் ஷா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களை துலிப் கோப்பையில் விளையாட வலியுறுத்தக் கூடாது. அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளில் உள்ள சர்வதேச அளவிலான வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டியுள்ளது. சில மூத்த வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலிப் கோப்பையில் விளையாடுகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் மூவரும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றனர். அதனை நாம் பாராட்ட வேண்டும் என்றார்.

ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் துலிப் கோப்பையில் விளையாடவில்லை. ரோஹித் சர்மா கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு துலிப் கோப்பையில் விளையாடியிருந்தார். விராட் கோலி கடந்த 2010 ஆம் ஆண்டு கடைசியாக துலிப் கோப்பையில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com