பாரீஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை அவனி லெகரா தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அவனி லெகரா, தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், மற்றொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மோனா அகர்வால், ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி அசத்தினார்.
இதன்மூலம் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி சார்பில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
உக்ரைன் வீராங்கனையான இரினா ஷ்செட்னிக் 627.5 புள்ளிகளுடன் பாராலிம்பிக் தகுதிச் சுற்று சாதனையை முறியடித்து முதலிடமும், நடப்பு சாம்பியனான அவனி லெகரா 625.8 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், உலகக் கோப்பையில் 2 முறை தங்கம் வென்றவரான மோனா 623.1 புள்ளிகளுடன் 5 ஆம் இடமும் பிடித்தனர்.