குகேஷ்
குகேஷ்

நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி: குகேஷ் பயிற்சியாளர்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்காக குகேஷ் நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி எடுத்துக்கொண்டதாக பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா தெரிவித்துள்ளார்.
Published on

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்காக குகேஷ் நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி எடுத்துக்கொண்டதாக அவரின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

குகேஷின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 13 சுற்றுகள் வரை டிங் லிரென் - குகேஷ் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இதனால் 14வது சுற்று விறுவிறுப்பாகத் தொடங்கியது. இந்தச் சுற்றும் சமநிலையையே எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் முடிவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பு 55வது நகர்த்தலில் லிரென் செய்த தவறு குகேஷுக்கு சாதகமாக மாறியது. இதனைத்தொடர்ந்து 58வது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றார்.

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.

குகேஷ் வெற்றி தொடர்பாக பேசிய அவரின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா, குகேஷின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்காக குகேஷ் நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவரின் உழைப்பு இன்று பலனளித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உலக சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com