இங்கிலாந்துக்கு போதுமான இலக்கு என்னவென்று இந்தியாவுக்குத் தெரியவில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன்

பேஷ்பால் யுக்திக்கு எதிராக எத்தனை ரன்கள் பாதுகாப்பான இலக்காக இருக்கும் என்பது இந்திய அணிக்கு உறுதியாகத் தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 67 ரன்கள் குவித்துள்ள நிலையில், அதன் வெற்றிக்கு இன்னும் 332 ரன்கள் தேவைப்படுகின்றன. 

இந்த நிலையில், பேஷ்பால் யுக்திக்கு எதிராக எத்தனை ரன்கள் பாதுகாப்பான இலக்காக இருக்கும் என்பது இந்திய அணிக்கு உறுதியாகத் தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸின்போது பதற்றமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்கள் பேட் செய்த விதத்தை பார்க்கும்போது, இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு எதிராக எத்தனை ரன்களை இலக்காக நிர்ணயித்தால் அது போதுமான ரன்களாக இருக்கும் என்பது இந்திய அணிக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் அதிக ரன்கள் முன்னிலை பெற்றும் மிகுந்த எச்சரிக்கையுடனே பேட்டிங் செய்தார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com