நான் சிறப்பாக பந்துவீச காரணம் ஜஸ்பிரித் பும்ரா: மனம் திறந்த இந்திய பந்துவீச்சாளர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு ஊக்கமளிப்பதாக 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் நமன் திவாரி தெரிவித்துள்ளார்.
நான் சிறப்பாக பந்துவீச காரணம் ஜஸ்பிரித் பும்ரா: மனம் திறந்த இந்திய பந்துவீச்சாளர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு ஊக்கமளிப்பதாக 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் நமன் திவாரி தெரிவித்துள்ளார்.

லக்னௌவைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நமன் திவாரி தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது யார்க்கர் மற்றும் வேகமான பந்துகளால் எதிரணியினரை அவர் திணற வைக்கிறார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை அவர் 10  விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் கைப்பற்றிய 4  விக்கெட்டுகளும் அடங்கும். 

இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு ஊக்கமளிப்பதாக 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் நமன் திவாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா எங்களுக்கு ஊக்கமளிப்பவராக இருக்கிறார். அவரது பந்துவீச்சு விடியோக்களை நான் அதிகம் பார்த்துள்ளேன். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அவரை சிலமுறை சந்தித்துள்ளேன். அந்த சந்திப்பின்போது அவருடன் பந்துவீச்சு தொடர்பாக நிறைய பேசியுள்ளேன். அவர் பல விஷயங்களுக்கு எனக்கு விளக்கமளித்துள்ளார். பந்துவீச்சு தொடர்பாக அவர் கொடுத்த ஆலோசனைகள் எனக்கு மிக உதவிகரமாக இருக்கிறது. எப்படித் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசவேண்டும் என்பது குறித்தும் எனக்கு ஆலோசனை கொடுத்தார். எனக்கு பிடித்த அனைத்துப் பந்துவீச்சாளர்களிடமிருந்தும் ஏதேனும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். சோயிப் அக்தரின் வேகப் பந்துவீச்சு, டெய்ல் ஸ்டெயினின் ஸ்விங், மிட்செல் ஸ்டார்க்கின் ஆக்ரோஷமான பந்துவீச்சு ஆகியவை பிடிக்கும் என்றார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 11) நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com