அறிமுக வீரர்கள் அசத்தலுடன் ரோஹித், ஜடேஜா சதம்: 445 ரன்கள் குவித்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்துள்ளது.
அறிமுக வீரர்கள் அசத்தலுடன் ரோஹித், ஜடேஜா சதம்: 445 ரன்கள் குவித்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சம நிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

அறிமுக வீரர்கள் அசத்தலுடன் ரோஹித், ஜடேஜா சதம்: 445 ரன்கள் குவித்த இந்தியா!
மன்னிப்பு கேட்ட ஜடேஜா: ரன்னவுட் சர்சை குறித்து மனம் திறந்த சர்ஃபராஸ் கான்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ரோஹித் 131 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஜடேஜா 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அறிமுக வீரர்களான சர்ஃபராஸ் கான் 62, துருவ் ஜுரேல் 46 ரன்கள் அடித்து அசத்தினார்கள். இவர்களுடன் அஸ்வின் 37 ரன்களும் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 445/10 ரன்கள் குவித்தது இந்திய அணி.

சதமடித்து தனது பாணியில் பேட்டினை சுழற்றிய ஜடேஜா.
சதமடித்து தனது பாணியில் பேட்டினை சுழற்றிய ஜடேஜா. Kunal Patil

இங்கிலாந்து சார்பாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளும் ரெஹன் அஹமது 2 விக்கெட்டுகளும் ரூட், ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.

அறிமுக வீரர்கள் அசத்தலுடன் ரோஹித், ஜடேஜா சதம்: 445 ரன்கள் குவித்த இந்தியா!
92 ஆண்டு கால வரலாற்று சாதனை: டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com