பென் டக்கெட் 150: 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பென் டக்கெட் 150: 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பென் டக்கெட் 150: 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து!
அஸ்வின் திடீர் விலகல்; புதிய வீரர் சேர்ப்பு: ஐசிசி விதி சொல்வது என்ன?
பென் டக்கெட்
பென் டக்கெட்

இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 126 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது இந்திய அணி.

ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். குல்தூப், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

தற்போது 2வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் விளையாடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com