மீண்டும் பந்துவீச்சுக்கு திரும்புகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
இந்தியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்பு.


இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய தோல்வியின் காரணமாக அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்புள்ளதாக பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தொடர்ச்சியான இரண்டு தோல்விகள் இங்கிலாந்து அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இங்கிலாந்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்புள்ளதாக அந்த அணியில் பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பிரண்டன் மெக்கல்லம்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறந்த வீரர். அவரால் பந்துவீச முடியும் என்றால் மட்டுமே பந்துவீசுவார். பந்துவீச ஆரம்பித்துவிட்டு பாதியில் பந்துவீசாமல் இருக்க முடியாது. அதனால் அவர் எப்படி உணர்கிறார் என்பதைப் பொறுத்து அடுத்தப் போட்டியில் பந்துவீசுவாரா, இல்லையா என்பது தெரியும். ஆனால், அவர் பந்துவீச்சுக்கு திரும்புவது இங்கிலாந்து அணிக்கு வலுசேர்க்கும் என்றார்.
முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வரும் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதில்லை. கடைசியாக அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டியின்போது பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...