நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
நிதான ஆட்டத்தால் இங்கிலாந்தைக் காப்பாற்றிய ஜோ ரூட்!

ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் லாகி ஃபெர்க்யூசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆடம் மில்னே, பென் சியர்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 102 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளன் பிளிப்ஸ் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடருக்குத் தயார்: அணி நிர்வாகம்

ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com