நிதான ஆட்டத்தால் இங்கிலாந்தைக் காப்பாற்றிய ஜோ ரூட்!

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது முதல் அரைசதத்தை இன்று பதிவு செய்தார்.
ஜோ ரூட்
ஜோ ரூட்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 250 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ஜோ ரூட்
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடருக்குத் தயார்: அணி நிர்வாகம்

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஸாக் கிராலி ( 42 ரன்கள்), பென் டக்கெட் (11 ரன்கள்) மற்றும் ஆலி போப் (0 ரன்) எடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவரது அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோ ருட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், பேர்ஸ்டோ 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்தார் பென் ஃபோக்ஸ். இந்த இணை நிதானமாக விளையாடி இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகரிக்கச் செய்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். பென் ஃபொக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட்
டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!

இங்கிலாந்து அணி 250 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது முதல் அரைசதத்தை இன்று பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com