ரிஷப் பந்த் ஐபிஎல் தொடருக்குத் தயார்: அணி நிர்வாகம்

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்.
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடருக்குத் தயார்: அணி நிர்வாகம்

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என ஏற்கனவே ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார்.

ரிஷப் பந்த் ஐபிஎல் தொடருக்குத் தயார்: அணி நிர்வாகம்
டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!

இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்து பேட்டிங் செய்கிறார். நன்றாக ஓடுகிறார். விக்கெட் கீப்பிங் செய்யவும் ஆரம்பித்துள்ளார். அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவார். முதல் 7 ஆட்டங்களில் ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கப்பட உள்ளார். அவர் உடல் நலனைப் பொறுத்து நாங்கள் தேவையான முடிவுகளை எடுப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com