உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வலுவான நிலையில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் அதிகரித்தது. இதன்மூலம் தரவரிசையில் இந்திய அணி 64.58 சதவிகித வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
75 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், 55 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் உள்ளது. இந்த வரிசையில் இங்கிலாந்து அணி 19.44 சதவிகித வெற்றிகளுடன் இங்கிலாந்து 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...