தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிராஜ் மிரட்டல் பௌலிங்: 55 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு சுருண்டது. 

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:44 am

DIN

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். 

டேவிட் பெடிங்ஹாம் (12), கைல் வெர்ரெயின் (15) தவிர மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

தென்னாப்பிரிக்காவில் சிறந்த பந்து வீசிய இந்திய பௌலர்கள் வரிசையில் சிராஜ் 3வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக 2022இல் ஷர்துல் தாக்குர் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இதுதான் தென்னாப்பிரிக்காவின் மோசமான சாதனையாகும். இதற்கு முன்பாக இலங்கை அணியிடம் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.