பேட்டிங்கில் 82 ரன்கள், பௌலிங்கில் 6 விக்கெட்டுகள்: அசத்தும் இளம் பாகிஸ்தான் வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஆமீர் ஜமால் அசத்தி வருகிறார். 
பேட்டிங்கில் 82 ரன்கள், பௌலிங்கில் 6 விக்கெட்டுகள்: அசத்தும் இளம் பாகிஸ்தான் வீரர்!
Published on
Updated on
1 min read

சிட்னியில் புதன்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் சோ்த்துள்ளது. வெளிச்சமின்மை, மழை காரணமாக வியாழக்கிழமை ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. 

ஆஸி. முதல் இன்னிங்ஸில் 299க்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் வீரர் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் 9வது இடத்த்ல் களமிறங்கி 82 ரன்கள் அடித்து அசத்தினார். பௌலிங்கில் முக்கியமான 6 விக்கெட்டுகளை எடுத்தும் அசத்தினார். இதனால் ஆஸி.300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. 

3ஆம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 67/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

யார் இந்த ஆமீர் ஜமால்? 

27 வயதான பாகிஸ்தானை சேர்ந்த இவர் 3வது டெஸ்ட் போட்டியிலேயே 18 விக்கெட்டுகள் வரை எடுத்து அசத்தியுள்ளார். ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடந்த டிச.14இல் முத்ன் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 

30 முதல்தர போட்டியில் விளையாடியுள்ள அவர் 88 விக்கெட்டுகளும் 700 ரன்களும் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். நேதன் லயன் ஓவரில் ஸ்விட்ச் ஹிட் ஆடி சிக்ஸர் அடிதத்து யாரும் மறக்க மாட்டார்கள். சிறந்த் ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார் இளம் பாகிஸ்தான் வீரர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.