பயிற்சியாளராக மாறுகிறாரா டேவிட் வார்னர்?

எதிர்காலத்தில் பயிற்சியாளராக மாறும் விருப்பம் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளராக மாறுகிறாரா டேவிட் வார்னர்?

எதிர்காலத்தில் பயிற்சியாளராக மாறும் விருப்பம் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் அண்மையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக அவர் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். அதேபோல உலகெங்கிலும் நடைபெறும் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளுக்கும் தன்னைத் தயாராக வைத்துள்ளார். 

இந்த நிலையில், எதிர்காலத்தில் பயிற்சியாளராக மாறும் விருப்பம் இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்காலத்தில் பயிற்சியாளராக மாற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது. எனது இந்த எண்ணம் தொடர்பாக எனது மனைவியிடம் முதலில் நான் பேச வேண்டியிருக்கும். உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்று மற்ற அணியின் வீரர்களுடன் அவர்கள் இணைந்து விளையாடுவதால் கிரிக்கெட் போட்டிகளில் எதிரணியினரை வம்பிழுக்கும் பழக்கம் அடுத்த பத்தாண்டுகளில் இல்லாமல் போய்விடும். வம்பிழுக்கும் பழக்கம் என்பது மறைந்து அழுத்தமான சூழல்களில் சிரித்துவிட்டு கடந்து போகும் மனநிலை உருவாகும் என்றார். 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 8786 ரன்கள் குவித்துள்ளார். அதில் 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் அடங்கும். சர்வதேசப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் (18,612 ரன்கள்) குவித்துள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையும் டேவிட் வார்னரை சேரும். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 27,368 ரன்களுடனுன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com