தென்னாப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை மார்கம் கேப்டனாக வழிநடத்துகிறார். அவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரன்கள் குவிப்பது என்பது எப்போதும் சிறப்பானது. டி20 லீக் என்பது கண்டிப்பாக வித்தியாசமானது. உங்களுக்கு டி20 போட்டிகள் நம்பிக்கையை அளிக்கும். அணியை கேப்டனாக வழிநடத்துவது என்பது மிகவும் பெருமையான விஷயம். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநத்துவது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரம். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக நான் தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.
நாளை (ஜனவரி 10) முதல் தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும்: கி. வீரமணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

