ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது பெருமையளிப்பதாக அந்த அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான துருவ் ஜுரல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குமார் சங்ககாரா பேசியதாவது: எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பெருமை கொள்ளச் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வாகின்றனர். துருவ் ஜுரல் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் மிகச் சிறந்த வீரர். இந்த இடத்துக்கு முன்னேறுவதற்கு அவர் கடுமையாக உழைத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நெருக்கடியான சூழலில் இருந்தபோது சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து அணிக்கு ஜுரல் பலம் சேர்த்தார். குறுகிய வடிவிலான போட்டிகளில் துருவ் ஜுரல் ஆட்டத்தை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளில் அவர் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!

ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்: ஈரான்
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

