முதல் டெஸ்ட்: தடுமாறும் மேற்கிந்தியத் தீவுகள்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
முதல் டெஸ்ட்: தடுமாறும் மேற்கிந்தியத் தீவுகள்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2  டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 17) அடிலெய்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி  முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 50 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 119 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கவாஜா 45 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேமரூன் கிரீன் மற்றும் நாதன் லயன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 22 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com