இந்திய டெஸ்ட் தொடர்: ஹாரி ப்ரூக்குக்கு மாற்று வீரர் இவர்தான்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக இங்கிலாந்து அணி அபு தாபியில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஹாரி ப்ரூக்  விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்ததாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகியுள்ளார். அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள மாட்டார். அவருக்கான மாற்று வீரரை விரைவில் இங்கிலாந்து தேர்வுக் குழு அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் அவர் இங்கிலாந்து அணியுடன் இணைவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டான் லாரன்ஸ் 551 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com