இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு தக்க பதிலளித்த ராகுல் டிராவிட்!

இங்கிலாந்து அணியின்  பேஷ்பால் யுக்திக்கு அவர்களைப் போலவே இந்திய வீரர்களும் பேஷ்பால் யுக்தியை கையாண்டதைப் பார்க்கவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 
இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு தக்க பதிலளித்த ராகுல் டிராவிட்!

இங்கிலாந்து அணியின்  பேஷ்பால் யுக்திக்கு அவர்களைப் போலவே இந்திய வீரர்களும் பேஷ்பால் யுக்தியை கையாண்டதைப் பார்க்கவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு எதிராக இந்திய அணி பின்வாங்காது எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 25) நடைபெறவுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதாக நான் நினைக்கவில்லை. சூழல்களுக்கு ஏற்றவாறு இந்திய அணி விளையாடும். இந்திய அணியில் உள்ள முன்வரிசை ஆட்டக்காரர்கள் இயல்பாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கக் கூடியவர்கள். அதனால் அவர்களது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதற்காக இங்கிலாந்தின்  யுக்தியைக் கண்டு பின்வாங்க மாட்டார்கள்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சவாலளிக்கும் விதமாக விளையாடுவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர்களது பேஷ்பால் யுக்தி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக பலனளித்தது. இந்திய ஆடுகளங்கள் வித்தியாசமானதாக இருக்கும். இங்கிலாந்தின் யுக்தியை இந்திய வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இந்த டெஸ்ட் தொடர் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் சிறப்பான வாய்ப்பு என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com