விராட் கோலிக்குப் பதிலாக ரஜத் படிதார்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக பிரபல ஆர்சிபி வீரர் ரஜத் படிதார் தேர்வாகியுள்ளார். 
விராட் கோலிக்குப் பதிலாக ரஜத் படிதார்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக பிரபல ஆர்சிபி வீரர் ரஜத் படிதார் தேர்வாகியுள்ளார். 

மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த 30 வயது ரஜத் படிதார், 2015 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 4000 ரன்கள், 45.97 சராசரி கொண்டுள்ளார். 2021இல் ரூ. 20 லட்சத்துக்கு ஆர்சிபி அணி தேர்வு செய்தது. 2002இல் ஐபிஎல் ஏலத்தில் படிதாரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. எனினும் போட்டி தொடங்கிய பிறகு ஆர்சிபி வீரருக்குக் காயம் ஏற்பட்டதால் படிதாரை ரூ. 20 லட்சத்துக்கு மீண்டும் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதிய சாதனை படைத்து புகழ்பெற்றுவிட்டார் படிதார். 

லக்னெளவுக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் படிதார் அடித்த சதத்தால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 49 பந்துகளில் சதமடித்த படிதார், 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இடம்பெறாத உள்ளூர் வீரர்களில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

சொந்த காரணங்களால் முதல் இரு போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். கடந்தாண்டு காயம் காரணமாக ஐபிஎல் விளையாடாத ரஜத் படிதாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ஜன.25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com