கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

2-வது டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் 35 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:13 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ்வா டா சில்வா 79 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து காவெம் ஹாட்ஜ் 71 ரன்களும், கெவின் சின்க்ளேர் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களிலும், மார்னஸ் லபுஷேன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 8 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், உஸ்மான் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார் மிட்செல் மார்ஷ். ஆனால், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மார்ஷ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தனர்.

Story image

இந்த ஜோடி ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாட அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் அதிரடியாக 65 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். பாட் கம்மின்ஸ் தனது பங்குக்கு அதிரடியாக விளையாடி அணிக்கு உதவினார். விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் நிதானமாக விளையாடிய கவாஜா 131 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். கம்மின்ஸ் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், கிமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.