
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்துவார் என இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வேகமாக நெருங்கி வருகிறார் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைக்க அஸ்வினுக்கு இன்னும் 7 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன.
இதையும் படிக்க: தேநீர் இடைவேளை: வலுவான நிலையில் மே.இ.தீவுகள்!
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்துவார் என இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவர் அந்த சாதனையை படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் எடுப்பதற்கு எனக்கு இன்னும் 25 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. அதற்கு இந்தத் தொடர் முழுவதும் தேவைப்படலாம். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்த வேண்டும் என விரும்புகிறேன். அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்றார்.