இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அணிக்கு பல சிறப்பான மறக்க முடியாத தருணங்கள் உருவாகின. சிறப்பான வெற்றிகளை பெற்றோம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான இந்த வெற்றி நான் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தற்போது வரை உள்ள போட்டிகளில் கிடைத்திருக்கும் வெற்றிகளிலேயே மிகவும் மகத்தான வெற்றி” எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார் பென் ஸ்டோக்ஸ்.
இதையும் படிக்க: எல்லாம் பொய்யானது: விராட் கோலியின் சகோதரர் உருக்கமான பதிவு!
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் நேர்காணல் ஒன்றில், “ நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது இதை கவனித்தேன். தோனி, பிளெமிங் இடையே நம்பமுடியாத அளவுக்கு புரிதல் இருக்கிறது. எந்த முடிவுகள் எடுத்தாலும் அது அணிக்கு சிறந்ததாக இருக்கும் என்பது மட்டுமே அவர்களது குறிக்கோள். இததான் நானும் மெக்குல்லமும் பின் தொடர்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
முதல் போட்டியில் வென்ற குஷியில் இருக்கும் ஸ்டோக்ஸ் 2வது போட்டியிலும் வெல்லுவாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்.2ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.