விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம்... காரணம் என்ன?

அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டுள்ள சூறாவளியால் பயணம் பாதிப்பு.

News image

உலகக் கோப்பையுடன் வீரர்கள்

Updated On :1 ஜூலை 2024, 7:56 am

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டுள்ள 4-ம் பிரிவு சூறாவளியால் மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தங்கியுள்ள பார்படாஸ் நகரில் இருந்து 570 கி.மீ. தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளதால், பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இன்று விமான சேவைகளை நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இந்திய வீரர்கள் பயணம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இருந்து நியூ யார்க் வந்து அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் துபை வழியாக தில்லி வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், சூறாவளி காரணமாக இந்திய வீரர்களின் பயணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் தனி விமானம் மூலம் நேரடியாக தில்லி அழைத்து வர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தில்லி வரும் இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் என 70 பேர் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.