
முன்னாள் இந்திய அணி, சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது 15ஆவது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியுள்ளார்.
2010 ஜூலை 4ஆம் நாள் சாக்ஷியுடன் தோனிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸிவா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் தனது கேப்டன்சியை (அணித் தலைவர்) கடந்த மே மாதம் ருதுராஜிக்கு மாற்றினார்.
கடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 161 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.55 என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக இருக்கிறார் தோனி. தற்போது ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
இந்நிலையில் தனது 15ஆவது ஆண்டு திருமண விழாவை மனைவி சாக்ஷியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.