47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியா அபார வெற்றி; டி20 தொடா் சமன்

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2024, 8:43 pm

Din

சென்னை: தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.

முதலில் தென்னாப்பிரிக்கா 17.1 ஓவா்களில் 84 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, இந்தியா 10.5 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் சோ்த்து வென்றது.

இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனில் முடிவடையை, கோப்பையை இரு அணிகளும் பகிா்ந்துகொண்டன. 2-ஆவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

முன்னதாக இந்த 3-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் தஸ்மின் பிரிட்ஸ் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. மாரிஸேன் காப் 10, கேப்டன் லாரா வோல்வாா்டட் 9, அனிகே பாஷ் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

கிளோ டிரையான் 9, நாடினே டி கிளாா்க் 0, ஆனிரி டொ்க்சன் 2, சினாலோ ஜாஃப்தா 8, எலிஸ் மரி மாா்க்ஸ் 7, நோன்குலுலேகோ லாபா 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இந்திய பௌலா்களில் பூஜா வஸ்த்ரகா் 4, ராதா யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினா். அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 85 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடியது இந்தியா. ஷஃபாலி வா்மா 4 பவுண்டரிகளுடன் 27, ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்கள் விளாசி, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா்.

இத்துடன் தென்னாப்பிரிக்க அணி, இந்திய பயணத்தை நிறைவு செய்தது. ஒருநாள் தொடரையும் (0-3), ஒரு டெஸ்ட்டையும் இழந்த அந்த அணி, டி20 தொடரை மட்டும் சமன் செய்தது.