சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையால் கௌதம் கம்பீரை பயிற்சியாளராக நியமிப்பதில் தாமதமா?

சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமிப்பதில் தாமதம்.
கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர் படம் | கேகேஆர் (எக்ஸ்)

சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை நிறைவடைந்தவுடன் முடிவுக்கு வந்தது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவரை தலைமைப் பயிற்சியாளராக அறிவிப்பது மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்பட்டது.

கௌதம் கம்பீர்
ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!

இந்த நிலையில், சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்படுகிறார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கனவே கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது. அவர்கள் இருவரில் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வலம் வந்தன. ஆனால், இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி இம்மாத இறுதியில் விளையாடவுள்ளது. பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கௌதம் கம்பீருடன் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கான சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அணிக்குத் தேவையான உதவிப் பணியாளர்களை தேர்வு செய்வதில் கம்பீருக்கு முழு சுதந்திரம் வழங்கவும் பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கௌதம் கம்பீர்
ஐசிசி ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா!

இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com