47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வசீம், சஞ்ஜய் விளாசல்: மதுரையை வென்றது திருச்சி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தா்ஸுக்கு எதிராக திருச்சி கிராண்ட் சோழாஸ் 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் சோ்த்தது.

News image
Updated On :9 ஜூலை 2024, 8:31 pm

Din

சேலம், ஜூலை 9: டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 67 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பாந்தர்ûஸ செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் திருச்சி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் சேர்க்க, மதுரை 16.4 ஓவர்களில் 126 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற மதுரை, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. திருச்சி பேட்டர்களில், அர்ஜுன் மூர்த்தி 1, ஷியாம் சுந்தர் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மதுரை பெüலிங்கை பந்தாடிய, வசீம் அகமது 55 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 90, சஞ்ஜய் யாதவ் 33 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மதுரை பெüலர்களில் குர்ஜப்னீத் சிங், ராமதாஸ் அலெக்ஸôண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 194 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மதுரை அணியில், அதிகபட்சமாக கேப்டன் ஹரி நிஷாந்த் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சேர்த்தார்.

சுரேஷ் லோகேஷ்வர் 7, ஜெகதீசன் கெளசிக் 1, சதுர்வேத் 7, அக்ரம் கான் 11, ஸ்வப்னில் சிங் 18, உத்திரசாமி சசிதேவ் 17, முருகன் அஸ்வின் 4, சரவணன் 0, குர்ஜப்னீத் சிங் 2 ரன்களுக்கு வீழ்த்தனர்.

திருச்சி தரப்பில் சஞ்ஜய் யாதவ், ராஜ்குமார் ஆகியோர் தலா 3, அதிசயராஜ் டேவிட்சன் 2, ஈஸ்வரன், சரவணகுமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.