
ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி 3ஆவது டி20யில் 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் 36, ஷூப்மன் கில் 66, அபிஷேக் சர்மா 10, ருதுராஜ் கெய்க்வாட் 49, சஞ்சு சாம்சன் 12*, ரிங்கு சிங் 1* ரன்களும் எடுத்தார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். 175 ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடி அரைசததினை தவறவிட்டார். 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர் முடிவில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி.
ஜிம்பாப்வே அணி சார்பில் சிக்கந்தர் ராஸா, முசார்பாணி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது.
4, 5ஆவது டி20 போட்டிகள் ஜூலை 13,14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.