ஓய்வுபெற கட்டாயப்படுத்தப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுபெற்றது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்துள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்படங்கள்: இங்கிலாந்து கிரிக்கெட் / எக்ஸ்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை அவரையே சேரும். முதல் இரண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் உள்ளனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
டி20 உலகக் கோப்பை தோல்வி: தேர்வுக்குழு தலைவரை நீக்கியது பாக். கிரிக்கெட் வாரியம்!

இந்நிலையில் ஓய்வு குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:

நான் இன்னமும் நல்ல உடல்தகுதியுடன் எப்போதும் போலவே பந்துவீசுகிறேன். நான் இன்னமும் விளையாட முடியுமென நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஓய்வுபெற வேண்டிய நாள் ஒன்று வருமென்பதையும் அறிவேன். அதனால் அந்த முடிவை தற்போதே ஏற்றுக்கொள்கிறேன். இதை சொல்லுவதற்கு கடினமாக இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை.

மான்செஸ்டரில் 3 பெரிய தலைகள் (பென் ஸ்டோக்ஸ், ராப் கீ, மெக்குல்லம்) என்னுடன் பேச அழைத்தபோது நான் பெரிதாக வியப்படையவில்லை. என்னுடைய ஓய்வு குறித்து கலந்தாலோசிக்கவே வருகிறார்கள் என்பது எனக்கு தெரியும். நான் அமைதியாக எதிர்கொண்டது அவர்களுக்குதான் வியப்பாக இருந்தது. நான் பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை, அதைக்குறித்து கோபமும் அடையவில்லை.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
யூரோ கோப்பை: 12 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஸ்பெயின்!

அவர்களது தொலைநோக்கு பார்வையும் அதற்கான முன்னெடுப்பாக எனது ஓய்வு குறித்து தனியாக பேச அழைத்ததையும் நான் பாராட்டுகிறேன். கடைசியாக ஒரு டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெருகிறேன் என அவர்களிடம் கூறி பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்தேன்.

கடைசி வாரம் கவுன்டி கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் எடுத்தேன். இன்னமும் என்னால் நன்றாக பந்துவீச முடிகிறது. தற்போது அழுவதைவிட நன்றாக விளையாடி போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com