
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி வருகிற ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 27-ல் இரண்டாவது டி20 போட்டியும், ஜூலை 29-ல் மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 1,4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். அதேபோல இலங்கை அணியும் அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளரான சனத் ஜெயசூர்யா தலைமையில் களமிறங்குகிறது.
இலங்கைக்கு எதிரான இந்த இருதரப்பு தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ஹார்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலும் வழிநடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.