
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை அவரையே சேரும். முதல் இரண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் உள்ளனர்.
முதல் டெஸ்டில் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஆண்டர்சன் 702 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.
மே.இ.தீ. அணி 2ஆம் இன்னிங்ஸில் 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்தது. ஃபாலோ ஆனை தவிர்க்க மே.இ.தீ. போராடி வருகிறது. 171 ரன்கள் பின் தங்கியுள்ள மே.இ.தீ. இன்றுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க அதிகமான வாய்ப்பு இருக்கின்றன.
ஆண்டர்சனுக்கு இதுதான் கடைசி டெஸ்ட். அநேகமாக இன்றுதான் கடைசிநாளும்கூட. இதனால் ரசிகர்கள் அவரை நெகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். மைதானத்துக்கு வெளியே அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆண்டர்சன் ஓய்வுக்கு வருத்தமாகாத்தான் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.