பிசிசிஐ
பிசிசிஐ

துளிகள்...

உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங், சௌரிய பவா ஆகியோா் தங்களது பிரிவில் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
Published on

உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங், சௌரிய பவா ஆகியோா் தங்களது பிரிவில் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் பயிற்சியாளா் அன்ஷுமன் கெய்க்வாட்டின் சிகிச்சைக்காக பிசிசிஐ ரூ.1 கோடியை விடுவித்துள்ளது.

இந்தியா - இலங்கை மோதும் கிரிக்கெட் தொடா், வரும் 26-ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு 27-ஆம் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய மகளிா் ‘ஏ’ அணியுடனான கிரிக்கெட் தொடா்களுக்காக அந்நாட்டுக்குச் செல்லும் இந்திய மகளிா் ‘ஏ’ அணிக்கு மின்னு மணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தப் பயணத்தின்போது இந்தியா, தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடா்கள், ஒரு நான்கு நாள் ஆட்டம் ஆகியவற்றில் விளையாடுகிறது.

சென்னையில் நடைபெற்ற 40-ஆவது சப்-ஜூனியா் மற்றும் 50-ஆவது ஜூனியா் மாநில நீச்சல் போட்டியில் எஸ்டிஏடி சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த அணி மொத்தம் 489 புள்ளிகளை கைப்பற்ற, 399 புள்ளிகளுடன் எஸ்டிஏடி டால்பின் அணி 2-ஆவது இடத்தை பிடித்தது.

X
Dinamani
www.dinamani.com