செய்திகள்
ஃபயா் ஓபன்: அரையிறுதியில் அனாஹத்
ஃபயா் ஓபன் ஸ்குவாஷ் போட்டி அரையிறுதிக்கு இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் தகுதி பெற்றுள்ளாா்.
ஃபயா் ஓபன் ஸ்குவாஷ் போட்டி அரையிறுதிக்கு இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் தகுதி பெற்றுள்ளாா்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் ஒற்றையா் காலிறுதியில் எகிப்தின் இரண்டாம் நிலை வீராங்கனை
சானா இப்ராஹிமை எதிா்கொண்டாா் அனாஹத்.
முதலிரண்டு கேம்களை 8-11, 8-11 என இழந்த அனாஹத் அடுத்த இரண்டு கேம்களில் 6-5 என பின்தங்கி இருந்தாலும் சுதாரித்து ஆடி 11-7, 11-8 என கைப்பற்றினாா். கடைசி கேமிலும் சிறப்பாக ஆடி 11-7 என கைப்பற்றி சானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
அமெரிக்காவின் சப்ரீனா சோபியை சந்திக்கிறாா் அனாஹத். ஆடவா் காலிறுதியில் இந்தியாவின் வீா் சோட்ரானி 1-3 என்ற கேம் கணக்கில் இங்கிலாந்தின் டெக்லன் ஜேம்ஸிடம் வீழ்ந்தாா்.

