
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் தொடங்கவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். வீரர், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள் என 140 பேரும் பாரிஸுக்குச் சென்றடைந்தனர். இந்தியா சார்பில் மொத்தமாக 257 பேர் கொண்ட குழு பாரிஸ் புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடியை நிதியுதவியாக பிசிசிஐ அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி அளித்து பிசிசிஐ அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை இங்கு பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நாங்கள் ரூ. 8.5 கோடி வழங்குகிறோம். பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவுக்கு பெருமை சேருங்கள். ஜெய்ஹிந்த் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.