
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 158 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே நிர்ணயித்துள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 25) முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 210 ரன்கள் மற்றும் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், அயர்லாந்துக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.