காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குவாலிஃபயரில் 1-இல் திருப்பூா்; எலிமினேட்டரில் திண்டுக்கல்

டிஎன்பிஎல் போட்டியில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணி குவாலிஃபயா் 1-க்கும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எலிமினேட்டருக்கும் வந்தன.

News image

குவாலிஃபயரில் 1-இல் திருப்பூா்; எலிமினேட்டரில் திண்டுக்கல்

படம்: டிஎன்பிஎல்

Updated On :28 ஜூலை 2024, 9:17 pm

Din

டிஎன்பிஎல் போட்டியில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணி குவாலிஃபயா் 1-க்கும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எலிமினேட்டருக்கும் வந்தன. அதில், திருப்பூா் - கோவையுடனும், திண்டுக்கல் - சேப்பாக்குடனும் மோதுகின்றன.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்ற 27-ஆவது ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தா்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வென்றது. முதலில் மதுரை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் சோ்க்க, சேப்பாக் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்களே சோ்த்தது.

இந்த ஆட்டத்தில் சேப்பாக் டாஸ் வென்று பௌலிங் செய்தது. மதுரை தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வா் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 55 ரன்கள் சோ்த்தாா். கோவை தரப்பில் பி. அபராஜித் 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தாா். பின்னா் சேப்பாக் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் விளாசினா். மதுரை பௌலா்களில் காா்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

நெல்லை வெற்றி: லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை சாய்த்தது.

முதலில் திண்டுக்கல் 19.4 ஓவா்களில் 136 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, நெல்லை 17.5 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 138 ரன்கள் சோ்த்து வென்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை, பந்துவீசத் தயாரானது. திண்டுக்கல் பேட்டிங்கில் அதிகபட்சமாக சிவம் சிங் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 70 ரன்கள் சோ்க்க, நெல்லை தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் நெல்லை பேட்டிங்கில் அருண் காா்த்திக் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45, கேப்டன் குருசாமி அஜிதேஷ் 5 பவுண்டரிகளுடன் 43* ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டனா். திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவா்த்தி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.