முதல் டி20 போட்டிக்குப் பிறகு இந்தியா, இலங்கை கேப்டன்கள் பேசியது என்ன?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்குப் பிறகு இரு அணிகளின் கேப்டன்களும் பேசியது குறித்து...


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்குப் பிறகு இரு அணியின் கேப்டன்களும் போட்டி குறித்து பேசியுள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 213 ரன்கள் குவித்தது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணி 149 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அடுத்த 21 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு எதுவும் இல்லை. ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. அவர்கள் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியது என்றார்.
இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேசியதாவது: பவர் பிளேவில் நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. ஆனால், ஆட்டத்தின் பிற்பகுதியில் சிறப்பாக பந்துவீசினோம். ஒரு கட்டத்தில் இந்திய அணி 240 ரன்கள் எடுக்கும் என தோன்றியது. ஆனால், நாங்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களை கட்டுப்படுத்தி விட்டோம். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து, அடுத்த 21 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார்.
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...