
தந்தையர் நாளை முன்னிட்டு தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலியை பாராட்டும் விதமாக அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தந்தையர் நாள் இன்று (ஜூன் 16) கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலரும் அவர்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தந்தையர் நாளை முன்னிட்டு தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலியை பாராட்டும் விதமாக அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் ஒரு ஓவியம் பகிரப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் குழந்தையின் பாத அச்சு ( வாமிகா) மற்றும் பெரிய ஆள் ஒருவரின் பாத அச்சும் (விராட் கோலி) இடம்பெற்றுள்ளது. மேலும், அந்தப் புகைக்கப்படத்தில் ஹேப்பி ஃபாதர்ஸ் டே என எழுதப்பட்டு அருகில் ஒரு சிவப்பு நிற எமோஜியும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளதாவது: எப்படி ஒருவரால் பல விஷயங்களில் சிறப்பாக செயல்படுபவராக இருக்க முடியும் என்பது புரியவில்லை. நாங்கள் உங்களை விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும், அக்காய் என்ற ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.