ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனாபடம் | பிசிசிஐ

பேட்டிங் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஸ்மிருதி மந்தனா.
Published on

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி மகளிருக்கான ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை இன்று (ஜூன் 18) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் இந்திய மகளிரணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் கௌதம் கம்பீர்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அந்தப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 117 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்டநாயகி விருதும் வழங்கப்பட்டது. அவரது சிறப்பான ஆட்டத்தால், ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா
சர்வதேச டி20 போட்டிகளில் 27 பந்துகளில் சதம் விளாசி சாதனை!

ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் நட்டாலி ஷிவர் பிரண்ட் 772 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இலங்கை அணியின் சமாரி அத்தபத்து 768 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருந்தி மந்தனா 715 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்