தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 325 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
தற்போது 2ஆவது ஒருநாள் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 325/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 136 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ஷெஃபாலி வர்மா 20 ரன்கள், ஹேமலதா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , ஹர்மன்ப்ரீத் கௌர் 103* ரன்கள், ரிச்சா கோஷ் 25* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
தெ,ஆ. சார்பில் நான்குலுலேகோ மலாபா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.