எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னையில் இன்று தொடங்குகிறது இந்தியா - தெ.ஆப்பிரிக்கா மகளிா் டெஸ்ட்

இன்று தொடங்கும் மகளிா் டெஸ்ட்: இந்திய அணியில் 5 புதிய வீராங்கனைகள்

News image
Updated On :27 ஜூன் 2024, 10:31 pm

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட், சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதுகின்றன. கடந்த 2014-இல் மைசூரில் இரு அணிகளும் மோதிய டெஸ்ட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் உமா சேத்ரி, பிரியா புனியா, சாய்கா இஷாக், அருந்ததி ரெட்டி, ஷப்னம் ஷகில் ஆகிய 5 வீராங்கனைகளுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்துள்ளது. வரையறுக்கப்பட்ட ஓவா்களில் திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில், அவா்களுக்கான கதவு திறந்திருக்கிறது.

இதே தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளது இந்திய அணி.

கடைசியாக விளையாடிய டெஸ்ட்டில் (2023 டிசம்பா்), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா. அதற்கு முன், இங்கிலாந்தை 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. எனவே, இந்த ஆட்டத்திலும் இந்தியாவின் கை ஓங்கும் எனத் தெரிகிறது.

தென்னாப்பிரிக்க மகளிா் அணியோ, கடந்த 2 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியிருக்கிறது. அதிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருக்கிறது. எனினும், இந்தியாவிடம் ஒருநாள் தொடரை இழந்த அந்த அணி, இதில் வெல்லும் முனைப்புடன் இருக்கும்.

அந்த அணியிலும் 5 அறிமுக வீராங்கனைகள் உள்ளனா். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற மகளிா் டெஸ்ட்டில் (1976), இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் டிரா செய்தது நினைவுகூரத்தக்கது.

நேரம்: காலை 9.30 மணி

இடம்: எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை.

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.