மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் இல்லை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று (ஜூன் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீரர்கள் (கோப்புப் படம்)
இங்கிலாந்து வீரர்கள் (கோப்புப் படம்)படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று (ஜூன் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 10 முதல் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் (கோப்புப் படம்)
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்!

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் மற்றும் ஜாக் லீச் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் புதிதாக ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன் மற்றும் தில்லான் பெனிங்டான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (முதல் டெஸ்ட்டில் மட்டும்), கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், ஸாக் கிராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லான் பெனிங்டான், ஆலி போப், மாட் பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com